ஹோமிபோபதி என்றால் என்ன? | What is Homeopathy?

What is Homeopathy?

ஹோமியோபதி என்ற வார்த்தை கிரேக்க வார்த்தைகளான 'ஹோமியோ' மற்றும் 'பாத்தோஸ்' என்பதில் இருந்து உருவானது.

ஹோமியோபதி என்பது ஒரு முழுமையான, உள்ளிருந்து தூண்டும் ஒரு அற்புத மருத்துவ முறையாகும். குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கியப் பாதிப்பை உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வுப்பூர்வமாக அணுகும் சிறந்த மருத்துவ முறையாக ஹோமியோபதி திகழ்கிறது.

ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பை மீண்டும் சுயமாக செயல்பட வைக்கும் “தூண்டு செயலாக்க முறை” யை இந்த ஹோமியோபதி மருத்துவ முறை பயன்படுத்துகிறது.இதன் பிரதான நோக்கம் சம்பந்தப்பட்ட உடல் உறுப்பின் இயக்கத்தை அதன் இயற்கையான நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது அல்லது அதற்கு இணையான நிலையை அடையச் செய்வது. ஒரு உறுப்பின் இயற்கையான செயல்படும் தன்மைக்கு ஏற்ப அதன் இயக்கத்தை தூண்டி விடுவதும் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பான வழிமுறைகளில் ஒன்று.

Why You Need to Choose Homeopathy?

உலகில் இன்று, ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மிக அதிக மக்களால் நம்பி பின்பற்றப்பட்டு மருத்துவம் என்றால் அது ஹோமியோபதி மருத்துவம்தான். ஆங்கில மருத்துவர்களே வியக்கும் வண்ணம், நீடித்த மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சில பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நிரந்தரமாகவும், முழுமையாகவும் தீர்வு இருக்கிறது என்று ஹோமியோபதி மருத்துவர்கள் சொல்கிறார்கள். மிகவும் எளியது; எல்லா வயதினருக்கும் ஏற்றது; மருந்துகளின் விலை மலிவு; பின்/பக்கவிளைவுகள் இல்லாதது.

ஹோமியோபதி வைத்தியத்தைப் பயன்படுத்துபவர்களில் பாதி பேர் இந்தியாவிலேயே உள்ளனர். இந்தியாவில் 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.

எதற்காக ஹோமியோபதி சிறப்பு வாய்ந்தது?

✅ நோயின் மூல காரணியை தீர்க்க உதவுகிறது

✅ நோயாளியின் உடல் தன்மை, மனநிலை, மற்றும் இயற்கை முறைப்படி மருத்துவம் வழங்கப்படுகிறது

✅ எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லை

✅ குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பானது

✅ நோய்களுக்கான நீர்மூலிகை (Dilution) அடிப்படையில் சிறிய அளவில் மருந்து பயன்படுத்தப்படுகிறது

விபத்துகளால் எலும்பு முறிவு, அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள பிரச்சினைகளுக்கு அலோபதி சிகிச்சைக்கு போகலாம். மற்றபடி, முக்கால்வாசி பிரச்சினைகளுக்கு ஹோமியோபதியில் நல்ல தீர்வு கிடைக்கும். கேன்சரை பொருத்தவரை முதல் மற்றும் இரண்டாம்கட்டத்தை ஹோமியோபதி சிகிச்சைமூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

முடக்குவாதம், நாள்பட்ட ஆஸ்துமா, நாள்பட்ட சரும பிரச்சினைகள் போன்றவைகளுக்கு ஹோமியோவில் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஹோமியோவின் சிறப்பு என்னவென்றால் நோயாளிகள் ஒவ்வொருவரின் மனம் மற்றும் உடல்நலத்தை ஆராய்ந்து அதற்கேற்ப மருந்துகளும் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

Content Credits : Homeomart.Net, DailyThanthi.Com, Panuval.Com, RaniOnline.Com

Comments

Popular posts from this blog

எந்த வயதில் எவ்வளவு இரத்த அழுத்தம் இருக்க வேண்டும்? | Blood Pressure by Age in Tamil

Discover Holistic Healing at Arjun Homeo Clinic in Karur

Kidney Stone Treatment | Arjun Homeo Clinic | Renal Stone Treatment in Karur